தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசபெருமாள் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு மேள தாளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுவாமிக்குத் தினமும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட உள்ள நிலையில் வரும் 7ம் தேதி கல்கருட சேவையும், 12ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.