கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி வெளியாகியுள்ளது.
ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு ஆட்டோவில் பயணித்துள்ளார். ஆனக்குழி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் காயமடைந்த இருவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.