சாதி வாரி கணக்கெடுப்பு : சட்டப்பேரவையில் அதிமுக - திமுக இடையே காரசார விவாதம்!
Sep 6, 2026, 12:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாதி வாரி கணக்கெடுப்பு : சட்டப்பேரவையில் அதிமுக – திமுக இடையே காரசார விவாதம்!

Murugesan M by Murugesan M
Apr 4, 2025, 04:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சாதி வாரிக் கணக்கெடுப்பு தொடர்பாகச் சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் எந்தவித தடையும் இல்லை என்பதால், அதனை உடனடியாக நடத்த வேண்டும் என  கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ரகுபதி, சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு எதிர்க்கவில்லை என்றும், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த முடியும் எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய தளவாய் சுந்தரம், 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் பாதகமான தீர்ப்பு வராமல் இருக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழக அரசுக்கு என்ன கஷ்டம் எனவும் வினவினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, பல ஆண்டு காலம் ஆட்சியிலிருந்த அதிமுக ஏன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டதாக தளவாய் சுந்தரம் தெரிவித்தார். அதற்கு, தேர்தலுக்காக மட்டுமே அந்த ஆணையம் அமைக்கப்பட்டதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டினார்.

இதனை தொடர்ந்து இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் முற்றியதால், இத்துடன்  விவாதத்தை முடித்துக் கொள்ளுமாறு சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.

Tags: today TN ASSEMBLYCaste-wise census: Heated debate between AIADMK and DMK in the Assembly!
Share
Tweet
SendShare
Previous Post

எம்புரான் பார்த்தவர்கள் சொல்வதை கேட்கும்போது கோபம் வருகிறது – துரைமுருகன்

Next Post

மீனாட்சியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி!

Related News

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies