பாங்காக்கில் உள்ள புத்தர் கோயிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை மேற்கொண்டார்.
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். பாங்காக்கில் வாட் ஃபோ என்று அழைக்கப்படும் சாய்ந்திருக்கும் புத்தரின் கோயிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை மேற்கொண்டார்.
அப்போது புத்த பிட்சுகளை ஆரத்தழுவி மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து பிரதமர் மோடிக்குப் புத்த பிட்சுகள் கோயிலைச் சுற்றிக்காட்டிச் சிறப்புகளை எடுத்துரைத்தனர். இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் தாய்லாந்து பிரதமர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.