உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
உதகை, கொடைக்கானலில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது
ஏப்ரல் 1 முதல், ஜூன் மாதம் இறுதி வரை, வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது.
இந்த நடைமுறையால் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், இ-பாஸ் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவானது விசாரணைக்கு வந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை எனவும், வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது ஏப்ரல் 8-ம் தேதி விசாரணை நடத்தப்படும் எனவும் தகவலளித்துள்ளது.
















