மாநிலங்களவை உறுப்பினர் வைகோவின் பேச்சுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் வக்ஃபு மசோதா மீதான விவாதத்தின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மிரட்டும் தொனியில் பேசினார். தமிழகத்திற்குள் கால் வை பார்க்கிறேன் என அவர் கூறினார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நிர்மலா சீதாராமன், அவர் பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு கோரிக்கை விடுத்தார்.