நடிகர் மனோஜ் குமார் மறைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில். புகழ்பெற்ற நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஸ்ரீ மனோஜ் குமார் ஜியின் மறைவு வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
உண்மையான தேசபக்தரான அவரது திரைப்படப் பங்களிப்புகள் ஒவ்வொரு இந்தியரிடமும் ஆழமான தேசிய உணர்வையும் பெருமையையும் விதைத்தாகவும். அவரது வாழ்க்கை வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.