சென்னை மதுரவாயலில் சாலையை கடக்க முயன்றவர் இருசக்கர வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலாண்டீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த இம்மானுவேல், மதுரவாயல் மார்க்கெட் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம், இம்மானுவேல் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.