‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாராவை அடிப்பது போல் வரும் காட்சியில், பலமுறை யோசித்த பின்னரே நடிக்க ஒப்புக்கொண்டதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
சசிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ‘டெஸ்ட்’ படக்குழுவினர், படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து விவரித்தனர்.
அப்போது பேசிய நடிகர் மாதவன், நினைத்து பார்க்காத கதாப்பாத்திரங்கள் எல்லாம் இப்படத்தில் இருந்ததால், முதலில் இப்படத்தில் நடிக்க விரும்பவில்லை எனவும், படத்தின் கதையே யார் ஹீரோ, யார் வில்லன் என்பதுதான் என்றும் தெரிவித்தார்.
மேலும், பெண்களை அடிப்பது போன்ற காட்சிகளில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால், நடிகை நயன்தாராவை அடிப்பது போல் வரும் காட்சியில் பலமுறை யோசித்த பின்னரே நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் மாதவன் தெரிவித்தார்.