ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த், சுருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில், ஆகஸ்ட் 14-ம் தேதி கூலி திரைப்படம் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.