கோவை மாவட்டம், ஆச்சிபட்டியில் மதுபோதையில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 31-ம் தேதி ஆச்சிபட்டியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு நள்ளிரவில் 6 இளைஞர்கள் மது போதையில் காரில் சென்றுள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் வளாகத்தில் சிகரெட் புகைத்ததை ஊழியர்கள் தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கம்பி மற்றும் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களால் ஊழியர்களை தாக்கிவிட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞர்கள் 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.