தெலங்கானாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்ததால் பண்ணை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர் மெட் பகுதியில் உள்ள பண்ணையில் கோழிகளுக்குப் பறவை காய்ச்சல் இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களில் மட்டும் அந்த பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. தகவலறிந்து சென்ற சுகாதாரத் துறை அதிகாரிகள், உயிரிழந்த கோழிகளைக் குழிதோண்டிப் புதைத்தனர்.
பண்ணையிலிருந்த முட்டைகளும் அழிக்கப்பட்டன. அத்துடன் பண்ணை கோழிகளின் முட்டைகளை விற்பனை செய்யக்கூடாது எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பண்ணை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.