புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 1-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று நிறைவடைந்தது. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க எடுத்து வரப்பட்ட புனித நீரானது கோயில் கும்ப கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.