சென்னையில் புதிய மண்டலங்களை உருவாக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
கடந்த மாதம் சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் 5 ஆண்டுகள் பதவிக் காலம் முழுமையாக முடிந்த பின்னரே புதிய மண்டலங்களை உருவாக்க முடியும் என விதி உள்ளது.
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் பதவிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளதால், 2027-ம் ஆண்டிலேயே புதிய மண்டலங்களை உருவாக்க முடியும்.
மணலி மண்டலத்தை பிரித்து திருவொற்றியூர், மாதவரம் மண்டலங்களுடன் சேர்ப்பதற்கு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய காரணங்களால் புதிய மண்டலங்கள் உருவாக்கும் பணியை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.