டிக்டாக் செயலிக்கு மேலும் 75 நாள் கால அவகாசம் வழங்கி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
டிக் டாக் செயலிக்கு ஜோ பைடன் அரசு தடை விதித்தது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து செயலிக்கு டிரம்ப் அவகாசம் வழங்கிய நிலையில், தற்போதும் மேலும் 75 நாட்களுக்கு அவசாகத்தை நீட்டித்துள்ளார்.