நீட் விவகாரத்தில் திமுகவினர் நாடகம் ஆடுகின்றனர் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் நீட்டை கைவிடுவோம், ரத்து செய்வோம் என திமுக நாடகம் ஆடுவதகாவும் அவர் கூறினார்.
தர்பூசணி பழம் சாப்பிடத்தக்க உணவு இல்லை என்ற வாதம் ஏற்புடையதல்ல என்றும், ர்பூசணி வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நடுவீதியில் நிற்பதாகவும் அவர் கூறினார். தர்பூசணியில் கலப்படம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான் கூறினார்.