திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இரு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக அரசு அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கோரை குப்பம் மற்றும் கூனங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையைப் பயன்படுத்தக் கூடாது என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தினர்.
இதனால் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தனர். பின்னர் இரு தரப்பும் 10 நாட்களுக்குள் சமரசமாகி அனுமதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.