மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடி அருகே கழிவறையில் உயிரிழந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன் பந்தல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் உள்ள கழிவறையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் பொறையார் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் கழிவறை கதவை உடைத்துப் பார்த்ததில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.