கோவை விமான நிலையத்திற்கு வந்த தமிழக முதலமைச்சருக்கு வரவேற்பளிப்பதற்காக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் திமுகவினர் பொதுமக்களை அழைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்வில் பங்கேற்பதற்காகத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.
அந்த சமயத்தில் திமுக-வினர் சுமார் 200 அரசு பேருந்துகளில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை அழைத்து வந்து முதலமைச்சருக்கு வரவேற்பளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, கோவை கோட்டத்திற்கு உட்பட்ட 45 பேருந்துகள் திமுக-வினர் மூலம் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், மீதமுள்ள பேருந்துகள் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
முதலமைச்சரின் வரவேற்பு ஏற்பாடுகளுக்காக கிட்டதட்ட 200 அரசு பேருந்துகள் மூலம், பொதுமக்கள் அழைத்து வரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.