நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிழங்கு மாவு ஏற்றி வந்த லாரி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
தம்மம்பட்டியில் இருந்து கிழங்கு மாவு லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரி, மெட்டாலா பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் ஒருபுறமாகத் திரும்பிய லாரி, அங்கிருந்த பொம்மை விற்பனை கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் கடை உரிமையாளர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.