சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் நிர்வாகி ஞானசேகரன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஞானசேகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளது என்பதால் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இதன் வழக்கு விசாரணையை போக்சோ சிறப்பு நீதிமன்றம், ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.