நாட்டின் வளர்ச்சிக்குத் தேசிய பங்குச் சந்தை தனித்துவமான பங்களிப்பை அளித்துள்ளதாக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தை அலுவலகத்திற்கு ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே விஜயம் செய்தார். அப்போது பங்குச்சந்தை அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
இதையடுத்து பேட்டியளித்த அவர், நாட்டின் வளர்ச்சிக்குத் தேசிய பங்குச் சந்தை தனித்துவமான பங்களிப்பை அளித்துள்ளது எனவும் வணிகத் துறையில் இந்தியாவை முதலிடத்திற்குக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
அத்துடன், நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் புதுமை மூலம் உலகில் இணையற்றதாக தன்னை நிலைநிறுத்தத் தேசிய பங்குச் சந்தை எடுத்த முயற்சியை எண்ணிப் பெருமைப்படுவதாகவும் கூறினார்.