திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தரமற்ற பட்டுப்புழுக்களை விவசாயிகள் தீயிட்டு அழித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழனியைச் சுற்றியுள்ள சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டுப்புழு வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய மாநில அரசுகளின் கீழ் செயல்பட்டு வரும் பட்டுப்புழு வளர்ப்பு மையத்தில் அதிகாரிகள் பட்டுப்புழுக்களை ஆய்வு செய்யாமலே விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் 15 நாட்களை நெருங்கியும் கூடு கட்டாத பட்டுப்புழுக்களை விவசாயிகள் தீயிட்டு அழித்தனர். தரமற்ற பட்டுப்புழுக்களை தங்களிடம் விற்று அதிகாரிகள் இழப்பை ஏற்படுத்துவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.