ஓசூர் அருகே 3 வயது சிறுவனைத் தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பனசுமான் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜப்பா என்பவரின் மகன் குஷால். இவர் தனது பாட்டியுடன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது தெருவில் சுற்றித் திருந்த நாய், சிறுவன் மீது பாய்ந்து கடித்துக் குதறியது. மூக்கு, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ஓசூர் மருத்துவமனையில் சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.