திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மனைவியை எரித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
மாலைமடைப்பட்டியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவர் தனது மனைவி செல்லம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்திலே செல்லம்மாளின் உடலில் தீப்பற்றி எரியவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது தன் கணவர் சின்னதம்பிதான் தன்னை தீ வைத்து எரித்ததாகத் தெரிவித்த செல்லம்மாள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்னதம்பியை போலீசார் கைது செய்தனர்.