திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் எனத் திண்டுக்கல் லியோனி பேசிக்கொண்டிருந்த போது சங்கு ஊதப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் வேலூர் அருகே அரங்கேறியது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டார்.
முன்னதாக மழை குறுக்கிட்டதால் ஒருமணி நேரம் தாமதமாகப் பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் பேசிய திண்டுக்கல் லியோனி, திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் எனக் கூறினார்.
அப்போது பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து சங்கு ஊதப்பட்டது. அதைத்தொடர்ந்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.