சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
இ-பாஸ் நடைமுறையின் காரணமாகக் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்குச் செல்ல முடியாதவர்கள் வார விடுமுறையையொட்டி ஏற்காட்டை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் அங்குள்ள முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாகப் படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கூட்டம் அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.