குமாரபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் உள்ள பாரில் 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த சாணார்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்குள்ள பாரில் அதிகாலை முதலே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுபாட்டிலுக்கு கூடுதலாக 100 ரூபாய் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுவதாகவும், 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதால் மக்கள் அச்சத்துடன் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.