திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அடக்கினர்.
மணப்பாறையை அடுத்த டீ உடையாபட்டி இருதய அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 650 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். அப்போது வாடிவாசலிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன.
அதனை மாடுபிடி வீரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அடக்கினர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.