ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறந்து வைத்த பின்னர், ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
பாம்பனில் சுமார் 555 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தைத் திறந்து வைத்த பின்னர், பிரதமர் நரேந்திர மோடி ராமநாதசுவாமி கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்குக் கோயில் கருவறை வாயிலில் அமர்ந்து அவர் தரிசனம் செய்தார்.
அப்போது அர்ச்சகர்கள் பிரதமருக்கு மாலை அணிவித்து புனித தீர்த்தங்களை வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி மனமுருக ராமநாதசுவாமியை வேண்டிக் கொண்டார். பின்னர் அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.