அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டென்னிசி பகுதியில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், அந்நாட்டு வானிலை மையம் புயல் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதையடுத்து எச்சரிக்கை மணியை ஒலித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.