இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் திரும்பியபோது ராமர் பாலத்தை தரிசித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
இலங்கையிலிருந்து திரும்பி வரும் வழியில் ராமர் சேது தரிசனத்துடன் ஆசீர்வாதமும் கிடைத்ததாகவும், அயோத்தியில் சூரிய திலகம் நடந்த அதே நேரத்தில், ராமர் பாலத்தின் தரிசனமும் தற்செயலாக கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
இருவரின் தரிசனமும் பெறுவது பாக்கியம் என்றும், நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ள ஸ்ரீராமரின் ஆசீர்வாதம், எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.