திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் மாடு முட்டியதில் சாலை ஓரம் நடந்து சென்ற முதியவர் படுகாயமடைந்தார்.
சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அம்பத்தூர் பகுதியில் முதியவர் ஒருவர் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மாடு, முதியவரை முட்டியது. இதில் கீழே விழுந்த முதியவருக்கு இடுப்பு, முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் முதியவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.