பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சமீப காலமாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பெங்களூருவின் பிடிஎம் லேஅவுட் பகுதியில் இரவு நேரத்தில் தனியாகச் சென்ற பெண்களைப் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து பெண் கூச்சலிட்டதால் அந்த நபர் அங்கிருந்து ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி உள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.