கேரள மாநிலம், மலப்புரம் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மஞ்சேரி பகுதியில் கோழிக்கோடு செல்லும் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையம் கடந்த சில நாட்களாக இயந்திர கோளாறு காரணமாகச் செயல்படாமல் இருந்தது. இந்நிலையில், ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள், போதுமான கருவிகள் இல்லாததால் கொள்ளை முயற்சியைக் கைவிட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.