திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராம நவமியையொட்டி அனுமந்த வாகன புறப்பாடு நடைபெற்றது.
முன்னதாக ராமர், லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் ஆகிய உற்சவர்களுக்கு பால், தேன், தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற வாகன புறப்பாட்டில், உற்சவர் மலையப்ப சுவாமி தங்க அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.