கலசபாக்கம் அருகே கோயில் திருவிழாவின் ஆடல், பாடல் நிகழ்ச்சியின்போது இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்தால் பதற்றம் நிலவியது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே வில்வாரணி பகுதியில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது.
நாள்தோறும் உற்சவ மூர்த்தியான முருகன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அந்த வகையில், காலையில் உற்சவருக்கு தீபா ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், மாலையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எதிர்பாராத விதமாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. உடனடியாக, போலீசார், இருதரப்பினரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.