ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஐராத் அணி வெற்றி பெற்றது.
ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 31 ரன்கள் எடுத்தார். 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 16 புள்ளி 4 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.
அணித்தலைவர் சுப்மன் கில் 61 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 49 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.