சேலத்தில் சகோதரருடன் ஏற்பட்ட சொத்து தகராறில் நெசவுத் தொழிலாளி செல்போன் டவர் மீது ஏறித் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
மேட்டூர் அருகேயுள்ள நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி தனது சகோதரருடன் ஏற்பட்ட சொத்து தகராறு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, வீரக்கல் பகுதியில் உள்ள 100 அடி செல்போன் டவர் மீது ஏறித் தற்கொலை மிரட்டல் விடுத்தார். சம்பவ இடம் வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரைச் சமாதானப்படுத்தி கீழே அழைத்து வந்தனர்.