நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் மது போதையில் வணிக வளாகம் முன்பு சரக்கு லாரியை இடித்து நிறுத்திய ஓட்டுநரைச் சரமாரியாக அடித்துப் பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வழியாகக் கோவைக்கு முருகன் என்பவர் சரக்கு லாரியை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார்.
அவர் அளவுக்கு அதிகமான மதுவை அருந்திவிட்டு, லாரியைத் தாறுமாறாக இயக்கியதாகக் கூறப்படுகிறது. குமராபாளையம் பிரிவுச் சாலை பகுதியில் வளைவில் திரும்பியபோது அங்கு இருந்த வணிக வளாகத்தின் முன்பு லாரியைக் கொண்டு சென்று இடித்து நிறுத்தியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓட்டுநர் மற்றும் கிளீனரை பிடித்துச் சரமாரியாக அடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.