ஆந்திர மாநிலம் குண்டூரில் நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்தார்.
ஸ்வர்ண பாரதி நகரை சேர்ந்த ஐசக் என்ற நான்கு வயது சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுவனைச் சுற்றி வளைத்த நாய்கள் கழுத்து உள்ளிட்ட இடங்களில் பயங்கரமாகக் கடித்தன.
இதில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.