நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
கோத்தகிரி காவலர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுவதாக வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் காவலர் குடியிருப்பு பகுதியில் இரையை தேடி கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை உலா வந்தன. இந்தக் காட்சி அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
இதனைக் கண்டு அச்சமடைந்த பொதுமக்கள், குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.