சோழவந்தான் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் குவியல்கள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 15 நாட்களாகக் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் குவியல்கள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விரைவில், நெல்மணிகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் நெல்மணிகளை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.