திருச்சி டிஐஜி வருண்குமாரை அவதூறாகப் பேசிய வழக்கில் இன்று மாலை 5 மணிக்குள் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என நீதிபதி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அவர் ஆஜராகாத நிலையில், இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் எனத் திருச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பாலாஜி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.