திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பெய்த கனமழையால் பழமை வாய்ந்த மண்டபம் இடிந்து விழுந்துள்ளது.
கல்லிடைக்குறிச்சியில் செல்வ விநாயகர் கோயில் எதிரில் கோயில் மண்டபம் ஒன்று உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த மண்டபத்தைப் பராமரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மிகவும் பழமை வாய்ந்த மண்டபம் இடிந்து விழுந்ததை கண்டு அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.
பழமையான கட்டடங்களையும், மண்டபங்களையும் பாதுகாப்பதற்கும், அவற்றைப் புனரமைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.