பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது.
இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 13 ரூபாயாகவும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.5% சரிந்து ஒரு பீப்பாய் 59 டாலருக்கு விற்கப்படுகிறது. பிரென்ட் கச்சா எண்ணெய் 4.39% விலை குறைந்து 62 டாலருக்கு விற்பனையாகிறது.
இதனால், பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயருமோ என மக்களிடம் அச்சம் ஏற்பட்டது.
கலால் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயராது எனவும், கலால் வருவாய் மட்டும் மத்திய அரசுக்குச் சென்று சேரும் எனவும் கூறப்படுகிறது. இந்த கலால் வரி மாற்றம் நாளை முதல் அமலாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.