அரசாணை 354 ஐ நடைமுறைப்படுத்தாமல் திமுக ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Aug 15, 2025, 11:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசாணை 354 ஐ நடைமுறைப்படுத்தாமல் திமுக ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 7, 2025, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும், அரசாணை 354 ஐ நடைமுறைப்படுத்தவில்லை என்பது ஏமாற்று வேலை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, எப்போதுமே, தனியாருக்கு ஆதரவாகவும், அரசுக் கட்டமைப்புகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கக் கூடாது என்பதற்காக, தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வருமானம் கிடைக்க நீட் எதிர்ப்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வுக் கோரிக்கையை, ஆட்சிக்கு வந்த ஐந்தாவது ஆண்டாகக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் திரு. ஸ்டாலின் அவர்களைச் சேரும்.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் நம்பியிருப்பது அரசு மருத்துவமனைகளைத்தான். சாமானிய மக்களுக்காக, சலிப்பின்றி பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்கவும், அரசு மருத்துவர்கள் நலன் மற்றும் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், இன்றைய முதலமைச்சரின் தந்தையும், மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி அவர்கள், கடந்த 2009 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை 354, இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆட்சிக்கு வரும் முன்பு, அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு குரல் கொடுத்த திரு. ஸ்டாலின் அவர்கள், தான் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும், அரசாணை 354 ஐ நடைமுறைப்படுத்தவில்லை என்பது ஏமாற்று வேலை.

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம், சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் தங்கியும், நாட்டிலேயே மிகக் குறைவாகவும் இருப்பதாக, அரசு மருத்துவர்கள் வேதனைப்படுகிறார்கள். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகத்தில் போதிய அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இல்லாமல், பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

போதிய மருத்துவர்கள் இல்லாமல், மருத்துவர்களின் பணிச்சுமையும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், மருத்துவர்களுக்கு உரிய ஊதியமும் வழங்காமல் புறக்கணித்து விட்டு, இத்தனை ஆண்டுகால தமிழக சுகாதாரத் துறை கட்டமைப்பையே பழுதாக்கிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

கொரோனா பேரிடர் காலகட்டத்தில், நமது நாடும், தமிழகமும் விரைவாக மீண்டெழுந்ததற்கு, நமது மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையும் முக்கியக் காரணம். நமது மருத்துவர்களின் சேவையை, திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே அங்கீகரித்திருக்க வேண்டும். ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும் அங்கீகரிக்காமல், போராடும் நிலைக்கு அரசு மருத்துவர்களைத் தள்ளியிருக்கிறது திமுக அரசு.

அரசு மருத்துவர்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற டாக்டர் லட்சுமி நரசிம்மன் அவர்கள் உயிரிழந்து, 5 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், அவர் முன்னெடுத்த கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லை. மேலும், கொரோனா பேரிடர் காலத்தில், தன்னலமின்றி பணியாற்றி, அதனால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் அவர்களின் மனைவி திருமதி. திவ்யா விவேகானந்தன் அவர்களுக்கு, அரசு வேலை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

அரசு வேலை வழங்கக்கோரி, திருமதி. திவ்யா விவேகானந்தன் அவர்கள், முதலமைச்சர்  ஸ்டாலினுக்குக் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தும், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. பொதுமக்களுக்காக உயிர் நீத்த ஒரு மருத்துவரின் குடும்பம், அரசு ஆதரவின்றி விடப்படுவது எத்தனை பெரிய வரலாற்றுப் பிழை.

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசாணை 354 ஐ நடைமுறைப்படுத்தக் காத்திருக்கும் அரசு மருத்துவர்களை இனியும் ஏமாற்றுவது சரியல்ல. ஊருக்கெல்லாம் தன் தந்தை பெயரை வைத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தனது தந்தை பிறப்பித்த அரசாணை 354 ஐ உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா பேரிடர் பணியில் உயிர்நீத்த அரசு மருத்துவர் திரு. விவேகானந்தன் அவர்கள் மனைவி திருமதி. திவ்யா விவேகானந்தன் அவர்களுக்கு உடனடியாக, அரசுப் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என்றும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் காலியிடங்கள் அனைத்தும் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: bjp k annamalaiMK StalinDMK is cheating by not implementing Government Order 354: Annamalai alleges!
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் ஜிடிபி ஒரு ட்ரில்லியன் டாலரை எட்ட 60 ஆண்டுக் காலம் எடுத்தது : அண்ணாமலை

Next Post

புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை ஏற்படுத்தக் கேரளா அரசு நடவடிக்கை!

Related News

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies