தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி நகர்ப் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், மாலையில் காசிவிஸ்வநாதர் மற்றும் உலகம்மன் சுவாமிகளுக்குத் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
உலகம்மன் மற்றும் காசி விஸ்வநாதர் திருக்கல்யாணம் மேளதாளங்கள் முழங்க விமரிசையாக நடைபெற்றது. அப்போது, நமச்சிவாய, நமசிவாய என்ற பக்தி கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.