அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்துப் பேசினார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது காசா விவகாரம், வர்த்தகப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்கள் கூட்டணியின் சிறந்த ஆதரவாளர் ட்ரம்ப் என்று தெரிவித்தார். அமெரிக்காவுடனான வர்த்தக பிரச்சனையை விரைந்து தீர்க்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
காசா மீண்டும் கட்டமைக்கப்படும்போது அங்குள்ள மக்களை வெளியேற்றும் ட்ரம்ப்பின் திட்டத்தை நெதன்யாகு பாராட்டினார்.
அதைத்தொடர்ந்து பேசிய ட்ரம்ப், காசாவிற்கு அமைதி வாக்குறுதி அளிக்கப்பட்டது என்றும், ஆனால் அது பலனளிக்கவில்லை எனவும் தெரிவித்தார். காசா, ஒரு ஆபத்தான மரணப் பொறி என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.