சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் காயம் அடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர துணை முதலமைச்சர் இளைய மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மார்க் சங்கரின் கைகள், மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மார்க் சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ விபத்து குறித்து அறிந்துகொண்ட பவன் கல்யாண், மகனைப் பார்ப்பதற்காகச் சிங்கப்பூர் செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.